தற்போது பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்த விடயம்.வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பிரதேசங்களில் இருந்து உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.இது இவ்வாறிருக்க பிரதேச செயலாளர் மூலமும் கிராம சேவை அதிகாரிகளின் ஊடாக பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.அவ்வாறு மக்களுக்கு கொடுப்பதற்காக வந்த பொருட்களில் மினரல் வாட்டர் பருப்பு சீனி போன்ற பொருட்கள் மீராவோடை தௌஹீத் காலா பீடத்திற்கு அண்மையில் உள்ள சில்லறைக் கடையொன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.இதனை விற்றுத் தருமாறு கௌரவ கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கொடுத்துள்ளார்.வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது.பிரதேச செயலார் அவர்களே இதற்கு நடவடிக்கை எடுங்கள்.
Saturday, January 15, 2011
வெள்ள விவாரணத்தில் மோசடி -
Tuesday, January 11, 2011
வான் கதவு திறப்பு காவத்தமுனை வெள்ளத்தில்
தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளங்களின் வான் கதவு திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தனால் காவத்தமுனை மற்றும் மீராவோடைப் பிரதேசத்தின் பதுரியா நகர் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக இப்பிரதேச மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் பிரதேச மக்களால் அவர்களுக்கு சமைத்த
உணவும் வழங்கப்படுகின்றது.
Sunday, January 9, 2011
மீண்டும் வெள்ளப் பெருக்கு - மக்கள் இடம் பெயர்வு
கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கல்குடாப் பிரதேசத்தின் பகுதிகளான ஓட்டமாவடி வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை செம்மண் ஓடை மீராவோடை போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.அதன் காரணமாக பொது மக்கள் தமது உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
நேற்று மாலையில் இருந்து பெய்த தொடர் மழை காரணமாக அதிகாலை 3.00 மணியளவில் வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழையுடன் சோ்ந்து வீசிய கடும் காற்றினால் மின்சாரம் சில பகுதிகளில் துண்டிக்கப் பட்டிருந்தது.அது மாத்திரமன்றி வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அண்மையில் உள்ள சிறிய வீட்டின் ஒரு பகுதி விழுந்துள்ளது.இதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிய வருகிறது.
புது வருட தினத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.இது தொடர்பாக எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
வாழைச்சேனை தமிழ் பிரதேசங்களில் மக்கள் பாடசாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என அறிய முடிகிறது.
Tuesday, January 4, 2011
வாழைச்சேனையில் கத்திக் குத்து
இன்று இரவு 7.30 மணி அளவில் வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அண்மையில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அருகாமையில் ஹோட்டல் செய்யும் முபாறக் என்பவர் இனந் தெரியாத நபர் ஒருவரினால் இன்று இரவு இஸா தொழுகை நேரத்தில் ஹோட்டலில் வைத்து கத்திக்குத்துக்கு இழக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)