Sunday, January 9, 2011

மீண்டும் வெள்ளப் பெருக்கு - மக்கள் இடம் பெயர்வு

 

கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கல்குடாப் பிரதேசத்தின் பகுதிகளான ஓட்டமாவடி வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை செம்மண் ஓடை  மீராவோடை போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.அதன் காரணமாக பொது மக்கள் தமது உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
நேற்று மாலையில் இருந்து பெய்த தொடர் மழை  காரணமாக அதிகாலை 3.00 மணியளவில்  வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழையுடன் சோ்ந்து வீசிய கடும் காற்றினால் மின்சாரம் சில பகுதிகளில் துண்டிக்கப் பட்டிருந்தது.அது மாத்திரமன்றி வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அண்மையில் உள்ள சிறிய வீட்டின் ஒரு பகுதி விழுந்துள்ளது.இதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிய வருகிறது.
புது வருட தினத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.இது தொடர்பாக எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

வாழைச்சேனை தமிழ் பிரதேசங்களில் மக்கள் பாடசாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என அறிய முடிகிறது.

No comments:

Post a Comment