Tuesday, May 17, 2011

ஆலய வழிபாட்டுக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோராவெளி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின்போது நண்பர்களுடன் கோராவெளி ஆற்றில் குளிக்கச்சென்ற சென்ற இளைஞன் ஒருவர் இன்று காலை ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவசாமி (வயது 26) என்ற மேசன் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வாழைச்சேனை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உற்சவத்தின் இறுதி நாளாகிய நேற்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
இதனால் ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று குளித்துக் கொண்டிருந்த வேளையிலே மேற்படி இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மட்டு. காத்தான்குடியில் சடலம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டு வளவிற்குள் சடலமொன்று புதைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடி 06ஆம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வீட்டு வளவொன்றுக்குள் சடலம் புதைக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வளவில் வசித்து வந்த 27வயமான புஹாரி றிஸ்வியா எனும் பெண் கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போயுள்ளார். அப்போது இப்பெண் ஐந்து மாத கர்ப்பிணி என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.


Thanks : Tamil win

Monday, May 16, 2011

கல்முனை கடற்கரைப்பள்ளி விசேட நிகழ்வு முடிவு.

வரலாற்று புகழ் மிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி வாசளின் 189ஆவது வருடாந்த கொடியேற்ற விழா நிகழ்வு நேற்று  மாலையுடன் நிறைவு பெற்றது.

இலங்கையின் பலபாகங்களிளும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வு கடந்த 12 நாட்களாக நடைபெற்றது.    தினமும் மௌலீத் வைபவத்துடன் மார்க்க உபதேசம் மற்றும் பக்கீர்மாரின் றாத்திப் வைபவம் என பலநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இறுதி நாளான இன்று கந்தூரி வைபவத்துடன் கொடியும் இறக்கப்பட்டு நாட்டினது அமைதிக்கும், அபிவிருத்திக்கு்ம்,  ஏனைய சமுகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கும்,   நாட்டில் சீரான நிம்மதியான ஆட்சி தொடர்ந்தும் இடம்பெறவும், உலகில் இன்று ஏற்பட்டுள்ள பயங்கரவாதிகளின் அச்சம் நீங்கி இஸ்லாமிய நாடுகளுக்கிடைய ஒற்றுமை நிலவுவதுடன், மேற்கத்திய சியோனிச வாதிகளின் அடவடித்தனத்திலிருந்து எமது நாட்டையும், ஏனைய நாடுகளையும் பாதுகாக் வேண்டும் என இறைவனிடம் இரு கரம் ஏந்தி விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏனைய சமயத்தைச் சேர்ந்த மக்களும் கலந்த கொண்டது விஷேட அம்சமாகும்.





 நன்றி : kalmunai .com

Tuesday, May 10, 2011

நாளை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் திறப்பு

1990ம் ஆண்டு தமிழ்ப் பயங்கரவாதிகளினால் தகா்க்கப்பட்ட வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மீண்டும் புனா்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொலில் நீரியல் வளத்துறை அமைச்சர்  டாக்டா் ராஜித சேனாரத்தின கலந்து நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்.




பத்றுஸ்ஸமான் அறிக்கைக்கு ஓட்டமாவடியில் எதிர்ப்பு

இன்று காலை ஓட்டமாவடியில் ஐ.நா அறிக்கைக்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வும் உணவு தவிர்ப்பு போராட்டமும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பலரும் கையொப்பமிட்டதைக காணக்கூடியதாக இருந்தது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தை மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் பிரதேச சபைத்தவிசாளர் ஹமீட் ஆகியோர் இன்று பிற்பகல் அளவில் நீராகாரம் வழங்கி முடித்து வைத்தனர்.
இந்நிகழ்வினை விசன் ஒப் சிறிலங்கா என்ற நிறுவனம் எற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, May 6, 2011

.: கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளில் போசாக்கு உணவில் மோசடி

.: கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளில் போசாக்கு உணவில் மோசடி

கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளில் போசாக்கு உணவில் மோசடி

கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளான காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயங்களில் மதிய உணவில் மோசடி நடப்பதாக அறிய முடிகின்றது.
காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தனது உறவினரான ஆசிரியா் ஒருவருக்கு  போசாக்கு உணவு வழங்குவதற்கான கொந்தராத்தை அதிபா் வழங்கியுள்ளார் .இந் நடவடிக்கை ஆசிரியா்களிடையே சலசலப்பை  ஏற்படத்தியுள்ளது.இப்பிரச்சனையை தீா்ப்தற்காக அதிபா்  தனது பாடசாலையில் உள்ள மேலும் நான்கு ஆசிரியா்களுக்கு உணவு வழங்கும் கொந்தராத்தை பிரித்து வழங்கியுள்ளார்.
ஐந்து ஆசிரியா்களும் தனது வீட்டிலிருந்து உணவினை சமைத்துக் கொண்டு வராது காவத்தமுனையில் உள்ள சிலரிடம் 16 ரூபாவிற்கு ஒரு உணவுப் பொதியை பெற்று பாடசாலை மாணவா்களுக்கு 20 ரூபாவிற்கு வழங்குகின்றனர்.
ஓா் பொதிக்கு ஆசிரியருக்கு 4 ரூபாவும் உணவு சமைப்பவருக்கு 6 ரூபாவும் இலாபமாக பெற்றுக் கொள்ளப்படுகிறது.இதனால்  20 ரூபாவிற்கான உணவு 10 ரூபாய்க்கான உணவாகவே மாணவா்களிடம் சென்றடைகிறது.
இதனால் கல்வி அமைச்சு எதிர்பார்க்கும் நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. 
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வித்தியாலயத்திலும் ஆரம்ப பிரிவுக்கு அப் பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியரும்  பாடசாலையின் அதிபரும் உணவு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் செயற்பாடு வேறு நபா்களின் பெயா்களிலேயே நடந்தேருகின்றது.
இரண்டு பாடசாலைகளிலும் ஆசிரியா்களே உணவு வழங்கும் பொறுப்பை கையகப்படுத்தியுள்ளதால் தரமற்ற உணவு வழங்கப்படுவதுடன் யாரிடமும் முறையிட முடியாத நிலை தோன்றியுள்ளதாக அப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
எமது பிரதேத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்  மற்றும் கோட்டக்கல்வி அதிகாரியும் இருந்த போதும் இவ்வாறான மோசடிகள் நடந்தேரிக் கொண்டே இருக்கின்றன.இவா்களால் உதுவும் செய்ய முடியாத  நிலையே உள்ளது.
உனவே இவ்விடயத்தில் மாகாண கல்விப்பணிப்பாளராவது நடவடிக்கை மேற்கொள்வாரா?