கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளான காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயங்களில் மதிய உணவில் மோசடி நடப்பதாக அறிய முடிகின்றது.
காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தனது உறவினரான ஆசிரியா் ஒருவருக்கு போசாக்கு உணவு வழங்குவதற்கான கொந்தராத்தை அதிபா் வழங்கியுள்ளார் .இந் நடவடிக்கை ஆசிரியா்களிடையே சலசலப்பை ஏற்படத்தியுள்ளது.இப்பிரச்சனையை தீா்ப்தற்காக அதிபா் தனது பாடசாலையில் உள்ள மேலும் நான்கு ஆசிரியா்களுக்கு உணவு வழங்கும் கொந்தராத்தை பிரித்து வழங்கியுள்ளார்.
ஐந்து ஆசிரியா்களும் தனது வீட்டிலிருந்து உணவினை சமைத்துக் கொண்டு வராது காவத்தமுனையில் உள்ள சிலரிடம் 16 ரூபாவிற்கு ஒரு உணவுப் பொதியை பெற்று பாடசாலை மாணவா்களுக்கு 20 ரூபாவிற்கு வழங்குகின்றனர்.
ஓா் பொதிக்கு ஆசிரியருக்கு 4 ரூபாவும் உணவு சமைப்பவருக்கு 6 ரூபாவும் இலாபமாக பெற்றுக் கொள்ளப்படுகிறது.இதனால் 20 ரூபாவிற்கான உணவு 10 ரூபாய்க்கான உணவாகவே மாணவா்களிடம் சென்றடைகிறது.
இதனால் கல்வி அமைச்சு எதிர்பார்க்கும் நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது.
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வித்தியாலயத்திலும் ஆரம்ப பிரிவுக்கு அப் பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியரும் பாடசாலையின் அதிபரும் உணவு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் செயற்பாடு வேறு நபா்களின் பெயா்களிலேயே நடந்தேருகின்றது.
இரண்டு பாடசாலைகளிலும் ஆசிரியா்களே உணவு வழங்கும் பொறுப்பை கையகப்படுத்தியுள்ளதால் தரமற்ற உணவு வழங்கப்படுவதுடன் யாரிடமும் முறையிட முடியாத நிலை தோன்றியுள்ளதாக அப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
எமது பிரதேத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரியும் இருந்த போதும் இவ்வாறான மோசடிகள் நடந்தேரிக் கொண்டே இருக்கின்றன.இவா்களால் உதுவும் செய்ய முடியாத நிலையே உள்ளது.
உனவே இவ்விடயத்தில் மாகாண கல்விப்பணிப்பாளராவது நடவடிக்கை மேற்கொள்வாரா?
No comments:
Post a Comment