Tuesday, May 17, 2011

மட்டு. காத்தான்குடியில் சடலம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டு வளவிற்குள் சடலமொன்று புதைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடி 06ஆம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வீட்டு வளவொன்றுக்குள் சடலம் புதைக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வளவில் வசித்து வந்த 27வயமான புஹாரி றிஸ்வியா எனும் பெண் கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போயுள்ளார். அப்போது இப்பெண் ஐந்து மாத கர்ப்பிணி என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.


Thanks : Tamil win

No comments:

Post a Comment