Tuesday, May 17, 2011

ஆலய வழிபாட்டுக்கு சென்றவர் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோராவெளி கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவத்தின்போது நண்பர்களுடன் கோராவெளி ஆற்றில் குளிக்கச்சென்ற சென்ற இளைஞன் ஒருவர் இன்று காலை ஆற்றில் முழ்கி உயிரிழந்துள்ளார்.
வந்தாறுமூலையைச் சேர்ந்த சுப்பிரமணியம் சிவசாமி (வயது 26) என்ற மேசன் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவரது சடலம் வாழைச்சேனை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி உற்சவத்தின் இறுதி நாளாகிய நேற்று செவ்வாய்க்கிழமை ஆலயத்தில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்பட்டுள்ளது.
இதனால் ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்று குளித்துக் கொண்டிருந்த வேளையிலே மேற்படி இளைஞன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

மட்டு. காத்தான்குடியில் சடலம் கண்டுபிடிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் வீட்டு வளவிற்குள் சடலமொன்று புதைக்கப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடி 06ஆம் குறிச்சி ஏ.எல்.எஸ்.மாவத்தையிலுள்ள வீட்டு வளவொன்றுக்குள் சடலம் புதைக்கப்பட்டுள்ளமை நேற்று செவ்வாய்க்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி வளவில் வசித்து வந்த 27வயமான புஹாரி றிஸ்வியா எனும் பெண் கடந்த ஒன்பது நாட்களாக காணாமல் போயுள்ளார். அப்போது இப்பெண் ஐந்து மாத கர்ப்பிணி என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அவரின் சடலமாக இது இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சடலத்தை தோண்டி பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.


Thanks : Tamil win

Monday, May 16, 2011

கல்முனை கடற்கரைப்பள்ளி விசேட நிகழ்வு முடிவு.

வரலாற்று புகழ் மிக்க கல்முனை கடற்கரைப்பள்ளி வாசளின் 189ஆவது வருடாந்த கொடியேற்ற விழா நிகழ்வு நேற்று  மாலையுடன் நிறைவு பெற்றது.

இலங்கையின் பலபாகங்களிளும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்த இந்நிகழ்வு கடந்த 12 நாட்களாக நடைபெற்றது.    தினமும் மௌலீத் வைபவத்துடன் மார்க்க உபதேசம் மற்றும் பக்கீர்மாரின் றாத்திப் வைபவம் என பலநிகழ்வுகளும் இடம்பெற்றன.

இறுதி நாளான இன்று கந்தூரி வைபவத்துடன் கொடியும் இறக்கப்பட்டு நாட்டினது அமைதிக்கும், அபிவிருத்திக்கு்ம்,  ஏனைய சமுகங்களுக்கிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய வாழ்க்கை வாழ்வதற்கும்,   நாட்டில் சீரான நிம்மதியான ஆட்சி தொடர்ந்தும் இடம்பெறவும், உலகில் இன்று ஏற்பட்டுள்ள பயங்கரவாதிகளின் அச்சம் நீங்கி இஸ்லாமிய நாடுகளுக்கிடைய ஒற்றுமை நிலவுவதுடன், மேற்கத்திய சியோனிச வாதிகளின் அடவடித்தனத்திலிருந்து எமது நாட்டையும், ஏனைய நாடுகளையும் பாதுகாக் வேண்டும் என இறைவனிடம் இரு கரம் ஏந்தி விஷேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏனைய சமயத்தைச் சேர்ந்த மக்களும் கலந்த கொண்டது விஷேட அம்சமாகும்.





 நன்றி : kalmunai .com

Tuesday, May 10, 2011

நாளை வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் திறப்பு

1990ம் ஆண்டு தமிழ்ப் பயங்கரவாதிகளினால் தகா்க்கப்பட்ட வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகம் மீண்டும் புனா்நிர்மாணம் செய்யப்பட்டு திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் கடற்றொலில் நீரியல் வளத்துறை அமைச்சர்  டாக்டா் ராஜித சேனாரத்தின கலந்து நிகழ்வை சிறப்பிக்கவுள்ளார்.




பத்றுஸ்ஸமான் அறிக்கைக்கு ஓட்டமாவடியில் எதிர்ப்பு

இன்று காலை ஓட்டமாவடியில் ஐ.நா அறிக்கைக்கு எதிராக கையொப்பமிடும் நிகழ்வும் உணவு தவிர்ப்பு போராட்டமும்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்நிகழ்வில் பலரும் கையொப்பமிட்டதைக காணக்கூடியதாக இருந்தது.
உணவு தவிர்ப்பு போராட்டத்தை மாகாண சபை உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியார் மற்றும் பிரதேச சபைத்தவிசாளர் ஹமீட் ஆகியோர் இன்று பிற்பகல் அளவில் நீராகாரம் வழங்கி முடித்து வைத்தனர்.
இந்நிகழ்வினை விசன் ஒப் சிறிலங்கா என்ற நிறுவனம் எற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Friday, May 6, 2011

.: கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளில் போசாக்கு உணவில் மோசடி

.: கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளில் போசாக்கு உணவில் மோசடி

கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளில் போசாக்கு உணவில் மோசடி

கோறளைப்பற்று மேற்கு பாடசாலைகளான காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயம் மற்றும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகாவித்தியாலயங்களில் மதிய உணவில் மோசடி நடப்பதாக அறிய முடிகின்றது.
காவத்தமுனை அல் அமீன் வித்தியாலயத்தில் தனது உறவினரான ஆசிரியா் ஒருவருக்கு  போசாக்கு உணவு வழங்குவதற்கான கொந்தராத்தை அதிபா் வழங்கியுள்ளார் .இந் நடவடிக்கை ஆசிரியா்களிடையே சலசலப்பை  ஏற்படத்தியுள்ளது.இப்பிரச்சனையை தீா்ப்தற்காக அதிபா்  தனது பாடசாலையில் உள்ள மேலும் நான்கு ஆசிரியா்களுக்கு உணவு வழங்கும் கொந்தராத்தை பிரித்து வழங்கியுள்ளார்.
ஐந்து ஆசிரியா்களும் தனது வீட்டிலிருந்து உணவினை சமைத்துக் கொண்டு வராது காவத்தமுனையில் உள்ள சிலரிடம் 16 ரூபாவிற்கு ஒரு உணவுப் பொதியை பெற்று பாடசாலை மாணவா்களுக்கு 20 ரூபாவிற்கு வழங்குகின்றனர்.
ஓா் பொதிக்கு ஆசிரியருக்கு 4 ரூபாவும் உணவு சமைப்பவருக்கு 6 ரூபாவும் இலாபமாக பெற்றுக் கொள்ளப்படுகிறது.இதனால்  20 ரூபாவிற்கான உணவு 10 ரூபாய்க்கான உணவாகவே மாணவா்களிடம் சென்றடைகிறது.
இதனால் கல்வி அமைச்சு எதிர்பார்க்கும் நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்காமல் உள்ளது. 
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வித்தியாலயத்திலும் ஆரம்ப பிரிவுக்கு அப் பிரிவிற்கு பொறுப்பான ஆசிரியரும்  பாடசாலையின் அதிபரும் உணவு வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் செயற்பாடு வேறு நபா்களின் பெயா்களிலேயே நடந்தேருகின்றது.
இரண்டு பாடசாலைகளிலும் ஆசிரியா்களே உணவு வழங்கும் பொறுப்பை கையகப்படுத்தியுள்ளதால் தரமற்ற உணவு வழங்கப்படுவதுடன் யாரிடமும் முறையிட முடியாத நிலை தோன்றியுள்ளதாக அப் பாடசாலைகளின் ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.
எமது பிரதேத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்  மற்றும் கோட்டக்கல்வி அதிகாரியும் இருந்த போதும் இவ்வாறான மோசடிகள் நடந்தேரிக் கொண்டே இருக்கின்றன.இவா்களால் உதுவும் செய்ய முடியாத  நிலையே உள்ளது.
உனவே இவ்விடயத்தில் மாகாண கல்விப்பணிப்பாளராவது நடவடிக்கை மேற்கொள்வாரா? 

Friday, April 29, 2011

ஓட்டமாவடி பாத்திமா பாலிகா ம.வி மாணவிகளின் சுற்றுலாவும் இலாபமடைந்த ஆசிரியர்களும்

கடந்த 19.04.2011 அன்று பாத்திமா பாலிகா ம.வித்தியாலயத்தைச் சோ்ந்த 50 மாணவிகளை அழைத்துக் கொண்டு அனுராதபுரம் - கண்டி - நுவரெலியா போன்ற பிரதேசங்களுக்கு ஓர் ஆசிரியா் குழு புறப்பட்டது. பாராட்டத்தக்கது.
சுற்றுலாவில் நடந்த விடயம் தான் வெறுக்கத்தக்கது.விடயத்திற்கு வருவோம்.
1. 50 மாணவிகளும் 5 ஆசிரியா்களும் என அனுமதி பெற்ற சுற்றுலாவில் வேறு பலரும் இணைந்து கொண்டுள்ளனர்.கே.பி ஹாஜியார் வீதியில் உள்ள ஓர் ஆசிரியரின் வீட்டின்  முன்வைத்து அவரது குடும்பத்தையும் மற்றும்  பாடசாலை மாணவிகளுடன் அநாகரிகத் தொடர்புகளை ஏற்படுத்தி பிரச்சனைகளுக்கு காரணமான மலசல கூட சுத்திகரிப்புத் தொழிலாளி பௌசான் என்பவரை ஏற்றிச் சென்றதன் மர்மம் என்ன?

அதுமட்டுமன்றி சியாம் மற்றும் சில்மி எனும் ஆசிரியா்களை குா்ணாகலையில் வைத்து அழைத்துச் சென்றதன் மா்மத்தை கூறுவார்களா?

2. சுற்றுலாக்க கட்டணம் தலா 2000ரூபா வசூலித்துவிட்டு அரிசி மற்றும் ஏனைய உணவுப்பொருட்களையும் பெற்றுக் கொண்டது ஏன்?

3.  வசூலித்த உளுத்துப் போன அரிசியை ஆக்கிய போது அது சோறு பழுதாகி விட்டது.ஆனால் சில ஆசிரியர்கள் தங்கள் மனைவி மற்றும்  தங்கள் பிள்ளைகளுக்கு கொத்து ரொட்டியும் கோழிக் கறியும் சாப்பிடக் கொடுத்துள்ளார்கள்.இது எந்த வகையில் நியாயம் ? ஆசிரியா்களை நம்பித்தானே பிள்ளைகளை அனுப்பினோம்.இது எவ்வளவு பெரிய துரோகத்தனம்.

4. இது வரை சுற்றுலாச் சென்ற மாணவிகள் 3 போ் வைத்தியசாலையில் மருந்து எடுத்துள்ளார்கள்.நோய்க்குக் காரணம் சுற்றுலாவில் வழங்கப்பட்ட உணவு தான் என வைத்தியர் முஸ்தபா கூறியுள்ளார்.சமூக கல்வி பாட ஆசிரியரே இது உங்களுக்கு தெரியாதா?.

5. இது க.பொ.த சாதாரண தர மாணவா்கள் சென்ற சுற்றுலா.இதில் அந்த வகுப்புக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை விட ஆரம்ப பிரிவு ஆசிரியா்களே அதிகமாகச் சென்றுள்ளார்கள்.இதற்கு யார் அனுமதி கொடுத்தது?

6. குறிப்பிட்ட சில ஆசிரியர்களே தொடா்ச்சியாக சுற்றுலாச் செல்கிறார்கள்.ஏன் ஏனைய ஆசிரியர்களுக்கு சந்தர்ப்பம் வழங்குவதில்லை.அதிபருக்கு இது தெரியாதா?
சுற்றுலாவில் பெறப்பட்ட இலாப பங்குதங்கள் கடமைகளை மறைக்கின்றதா?

பெற்றோர்களும் கல்வி அதிகாரிகளும் இதற்கு எடுக்கும் நடவடிக்கை என்ன?

  • சுற்றுலாவில் எடுத்த புகைப்படங்கள் விரைவில்.















கல்லெல பாலத்தில் வேன் பாய்ந்து 06 போ் பலி

இன்று பி.ப மருதமுனையில் இருந்து யு.கே செல்வதற்காக பயணம் செய்து கொண்டிருந்த வாகனமொன்று கல்லெல பாலத்தில் பாய்ந்ததால்  06 போ் பலியாகியுள்ளனர். இதுவரை 4 சடலம் மீட்கப்பட்டுள்ளது.தேடுதல் பணி தொடர்கிறது.

Wednesday, April 6, 2011

யானை தாக்கி செம்மணோடை நபர் பலி


பொத்தானைப் பிரதேசத்திற்கு நேற்று ( 06.04.2011 ) விறகு எடுக்கச் சென்ற செம்மணோடை  நபரான முகம்மது இஸ்மாயில் இப்றாஹிம் என்ற நபர் மீது யானை தாக்கியுள்ளது. இதனால் குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.இந்நாரின் ஜனாஸா பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப் படும்.

Saturday, January 15, 2011

வெள்ள விவாரணத்தில் மோசடி -

தற்போது பெய்து கொண்டிருக்கும் கடும் மழை காரணமாக மக்கள் பல இன்னல்களை அனுபவித்துக் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்த விடயம்.வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பிரதேசங்களில் இருந்து உதவிகள் வந்த வண்ணம் இருக்கின்றன.இது இவ்வாறிருக்க பிரதேச செயலாளர் மூலமும் கிராம சேவை அதிகாரிகளின் ஊடாக பொருட்கள் மக்களுக்கு வழங்கப்படுகின்றது.அவ்வாறு மக்களுக்கு கொடுப்பதற்காக வந்த பொருட்களில் மினரல் வாட்டர் பருப்பு சீனி போன்ற பொருட்கள் மீராவோடை தௌஹீத் காலா பீடத்திற்கு அண்மையில் உள்ள சில்லறைக்  கடையொன்றில் விற்பனைக்கு வந்துள்ளது.இதனை விற்றுத் தருமாறு கௌரவ கிராம சேவை உத்தியோகத்தர் ஒருவர் கொடுத்துள்ளார்.வேலியே பயிரை மேய்ந்தால் யாரிடம் முறையிடுவது.பிரதேச செயலார் அவர்களே இதற்கு நடவடிக்கை எடுங்கள்.

Tuesday, January 11, 2011

வான் கதவு திறப்பு காவத்தமுனை வெள்ளத்தில்

தொடர்ச்சியாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குளங்களின் வான் கதவு திறக்கப்பட்டது. இதனால் ஆற்றில் நீர் மட்டம் அதிகரித்தனால் காவத்தமுனை மற்றும் மீராவோடைப் பிரதேசத்தின் பதுரியா நகர் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்தது.
இதன் காரணமாக இப்பிரதேச மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளதுடன் பிரதேச மக்களால் அவர்களுக்கு சமைத்த 
உணவும் வழங்கப்படுகின்றது.


Sunday, January 9, 2011

மீண்டும் வெள்ளப் பெருக்கு - மக்கள் இடம் பெயர்வு

 

கிழக்கு மாகாணத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.கல்குடாப் பிரதேசத்தின் பகுதிகளான ஓட்டமாவடி வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை செம்மண் ஓடை  மீராவோடை போன்ற பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.அதன் காரணமாக பொது மக்கள் தமது உறவினர் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.
நேற்று மாலையில் இருந்து பெய்த தொடர் மழை  காரணமாக அதிகாலை 3.00 மணியளவில்  வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளது. மழையுடன் சோ்ந்து வீசிய கடும் காற்றினால் மின்சாரம் சில பகுதிகளில் துண்டிக்கப் பட்டிருந்தது.அது மாத்திரமன்றி வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அண்மையில் உள்ள சிறிய வீட்டின் ஒரு பகுதி விழுந்துள்ளது.இதனால் எவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிய வருகிறது.
புது வருட தினத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் நாளை திறக்கப்படுமா என்ற சந்தேகம் நிலவுகிறது.இது தொடர்பாக எந்த அறிவித்தலும் கிடைக்கவில்லை என பாடசாலை அதிபர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.

வாழைச்சேனை தமிழ் பிரதேசங்களில் மக்கள் பாடசாலைகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர் என அறிய முடிகிறது.

Tuesday, January 4, 2011

வாழைச்சேனையில் கத்திக் குத்து

இன்று இரவு 7.30 மணி அளவில் வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அண்மையில் கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இது தொடர்பாக தெரிய வருவதாவது வாழைச்சேனை ஹைராத் பள்ளி வாயலுக்கு அருகாமையில் ஹோட்டல் செய்யும் முபாறக் என்பவர் இனந் தெரியாத நபர்  ஒருவரினால் இன்று இரவு இஸா தொழுகை நேரத்தில் ஹோட்டலில் வைத்து கத்திக்குத்துக்கு இழக்காகியுள்ளார்.
படுகாயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் வைத்தியசாலைக்கு  எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.