
மட்/வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையில் எதிர்வரும் 02.11.2010ம் திகதி செவ்வாய்
க்கிழமை காலை 8.30 மணிக்கு முப்பெரும் விழா (பரிசளிப்பு, பஸ் கையளிப்பு , அடிக்கல் நாட்டு விழா) நடைபெறவுள்ளது.அதிபர் யு.அஹமட் அவர்களின் தலைமையில் நடக்கும் இவ் வைபவத்திற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு
சிறப்பிக்கவுள்ளார்.
பிரதி அமைச்சர் தேர்தலுக்குப்பின் வாழைச்சேனை பிரதேசத்திறகு ஓர் நிகழ் வொன்றிற்கு வருகை தருவது இதுவே முதற் தடவை.அதன் காரணமாக அமைச்சர் அவர்களின் ஆதரவாளர்கள் பிரதேச மக்கள் என பலரும் அமைச்சரின்வருகைக்காக காத்திருக்கின்றனர்.
No comments:
Post a Comment