Sunday, November 21, 2010

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பாராட்டு

2010 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மாணவர்களை பாராட்டும் வைபவம் ஒன்றை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நடாத்த வுள்ளது.
இந் நிகழ்வு பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.ஹமீட் அவர்களின் தலைமையில் நாளை ( 22.11.2010 ) ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை அமைச்சர் சுபைர் அவர்களும் கைத் தொழில் அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில்  கற்பித்த ஆசிரியர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கல்குடாவின் செய்தித் தளத்துக்கு தெரிவித்தார்.

No comments:

Post a Comment