Wednesday, December 1, 2010

மீண்டும் சுனாமியா - மக்கள் அச்சத்தில்

மட்டக்களப்பு - கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

நேற்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 2004 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலும்  இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்திச் சென்றன. இவ்வாறு பாம்புகள் தென்பட்டு சுமார் 5 மாதங்களில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இப்பாம்புகள் வெளியானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment