Friday, December 24, 2010

தொடர் மழை - வீடுகளுக்குள் நீர் புகுந்தது

கல்குடாப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி மீராவோடை பகுதிகளை அண்டிய பிரதேசங்களான பிறைந்துரைச்சேனை  மாவடிச்சேனை செம்மண்ணோடை போன்ற தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின.சீரான வடிகால்கள் இல்லாமையால் பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயல் பிரதேசம் குளம்போல் காட்சியளிக்கின்றது.
தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததனால் பல குடும்பங்கள் உறவினர்களது வீடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.அத்துடன் வீட்டுப் பொருட்களும் நீரினால் நனைந்துள்ளன.
அத்துடன் வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ கட்டிடத்தில் இயங்கிவரும் சுகாதார அலுவலகமும் நீரில் மூழ்கியுள்ளதுடன் மருந்துப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.






  Thanks:
  picture : Br. Imthad facebook    .

No comments:

Post a Comment