Wednesday, December 8, 2010

பாத்திமா பாலிகாவில் ஆசிரியர் கைது

ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ஆரம்ப பிரிவு மாணவி ஒருவருக்கு தண்டனை வழங்கியதற்காக ஆசிரியர் ஒருவர்  இன்று காலை ( 08.12.2010 ) வாழைச்சேனைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக பாடசாலை இடை நடுவில் கலைக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் - ஆசிரியைகள் அனைவரும் வாழைச்சேனை பொலிசுக்கு சென்றுள்ளனர்.
விசாரணையின் பின் ஆசிரியரை விடுதலை செய்வதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் மாணவியின் பெற்றோருடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது..
மாணவி இதுவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment