- நெருக்கடிகளை கையாள்வதில் நபிகளாரின் வழிமுறை
- புதிய இலங்கையில் வரலாறு பண்பாடு சகவாழ்வு போன்றவற்றுக்கான இஸ்லாமிய சந்திப்பு முறை
- வினைத்திறனுள்ள இஸ்லாமிய குடும்ப வாழ்வு
- சவால்களை எதிர் கொண்டு புத்ததாக்கத்துடன் இளைஞர்கள் சிந்திப்பது எப்படி?
Wednesday, December 29, 2010
இஸ்லாமிய மாநாடு
நாளை வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வாயலில் மாபெரும் இஸ்லாமிய மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வாழைச்சேனை கல்குடா வை.எம்.எம்.ஏ பேரவை மற்றும் சமூக விழிப்புணர்வு ஒன்றிம் என்பவற்றின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ் வைபவத்தில்
Saturday, December 25, 2010
சுஹதாக்கள் நினைவு தினம்
1990.டிசம்பர் 26 அன்று புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கல்குடாப் பிரதேச முஸ்லிம் புத்தி ஜீவிகளை நினைவு கூறும் முகமாக வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளி வாயலில் கத்முல் குர்ஆன் வைபவமும் நினைவுச் சொற் பொழிவும் சுஹதாக்கள் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அஸர்த் தொழுகையின் பின் நடைபெறவுள்ள இவ் வைபவத்திற்கு பிரதேச மக்கள் அனைவரையும் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Friday, December 24, 2010
தொடர் மழை - வீடுகளுக்குள் நீர் புகுந்தது
கல்குடாப் பிரதேசத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி மீராவோடை பகுதிகளை அண்டிய பிரதேசங்களான பிறைந்துரைச்சேனை மாவடிச்சேனை செம்மண்ணோடை போன்ற தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கின.சீரான வடிகால்கள் இல்லாமையால் பிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயல் பிரதேசம் குளம்போல் காட்சியளிக்கின்றது.
தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததனால் பல குடும்பங்கள் உறவினர்களது வீடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.அத்துடன் வீட்டுப் பொருட்களும் நீரினால் நனைந்துள்ளன.
அத்துடன் வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ கட்டிடத்தில் இயங்கிவரும் சுகாதார அலுவலகமும் நீரில் மூழ்கியுள்ளதுடன் மருந்துப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.
Thanks:
picture : Br. Imthad facebook .
தொடர் மழை காரணமாக வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததனால் பல குடும்பங்கள் உறவினர்களது வீடுகளுக்கு குடி பெயர்ந்துள்ளனர்.அத்துடன் வீட்டுப் பொருட்களும் நீரினால் நனைந்துள்ளன.
அத்துடன் வாழைச்சேனை வை.எம்.எம்.ஏ கட்டிடத்தில் இயங்கிவரும் சுகாதார அலுவலகமும் நீரில் மூழ்கியுள்ளதுடன் மருந்துப் பொருட்களும் சேதமடைந்துள்ளன.
Thanks:
picture : Br. Imthad facebook .
Thursday, December 9, 2010
வாழைச்சேனையில் கடைகளில் கொள்ளை
வாழைச்சேனை சந்தைத் தொகுதியில் உள்ள 4 கடைகள் இரவு வேளையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.கோபி சிற்றி சில்லைரைக்கடை புடைவைக்கடை இரும்புக் கடை என ஒரே நேரத்தில் கொள்ளையிடப்பட்டுள்ளன.4 கடைகளில் இருந்தும் ஒரு இலட்சங்களுக்கு கூடுதலான பொருட்கள் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிசில் செய்த முறைப்பாட்டை அடுத்து வாழைச்சேனை பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பொலிசில் செய்த முறைப்பாட்டை அடுத்து வாழைச்சேனை பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
Wednesday, December 8, 2010
பாத்திமா பாலிகாவில் ஆசிரியர் கைது
ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் ஆரம்ப பிரிவு மாணவி ஒருவருக்கு தண்டனை வழங்கியதற்காக ஆசிரியர் ஒருவர் இன்று காலை ( 08.12.2010 ) வாழைச்சேனைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் காரணமாக பாடசாலை இடை நடுவில் கலைக்கப்பட்டதுடன் ஆசிரியர்கள் - ஆசிரியைகள் அனைவரும் வாழைச்சேனை பொலிசுக்கு சென்றுள்ளனர்.
விசாரணையின் பின் ஆசிரியரை விடுதலை செய்வதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் மாணவியின் பெற்றோருடன் சமாதானம் செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது..
மாணவி இதுவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலே சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Tuesday, December 7, 2010
சாதுலியா வித்தியாலய காணி பறிப்பு
பிறைந்துரைச்சேனை சாதுலியா அஸ்ஹர் வித்தியாலயங்களுக்கு என பொதுவாக பாவிக்கப்பட்டு வந்த காணி பிறைந்துரைச்சேனை பன்சல விகாராதி பதியால் வேலி போடப்பட்டு மறிக்கப்பட்டுள்ளது.
1990ம் ஆண்டில் இருந்து இரு பாடசாலைகளாலாலும் பாவிக்கப்பட்டு வந்த காணி விகாரைக்குச் சொந்தமானது என விகாராதி பதியால் முள்வேலி இடப்பட்டுள்ளது.மைதானத்துக்கு எல்லையாக இருந்த மதிற்சுவரை இடித்துவிட்டே முள் வேலி இடப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
அந் நூரில் விஞ்ஞான தொழிநுட்ப கண்காட்சி
வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலையில் நாளையும் நாளை மறு தினமும்
( 08.12.2010 - 09.12.2010 )விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் அனுசரனையுடன் கல்விக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பல்வேறு புதிய தொழிநுட்பங்களில் உணவு தயாரித்தல் சிக்கன அடுப்பு முறை போன்ற பல்வேறு அம்சங்கள் அதில் இடம் பெறவுள்ளதுடன் பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சியும் இதில் இடம்பெறவுள்ளதாக பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் எமது செய்தித் தளத்துக்கு தெரிவித்தார்.
Thursday, December 2, 2010
நூர்தீன் மசூர் எம்.பி மரணம்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நூர்தீன் மசூர் இன்று காலை காலமாகியுள்ளார் .
மாரடைப்பு காரணமாக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் காலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, December 1, 2010
மீண்டும் சுனாமியா - மக்கள் அச்சத்தில்
மட்டக்களப்பு - கல்லடி பாலத்தின் கீழுள்ள வாவியில் ஆயிரக்கணக்கான பாம்புகள் நீந்திச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
நேற்று மாலை முதல் வாவியில் நீந்தும் வெள்ளை மற்றும் பச்சை நிறங்களில் காணப்படும் இப்பாம்புகள் 2 அடிக்கும் 3 அடிக்கும் இடைப்பட்டவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
2004 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலும் இலட்சக்கணக்கான பாம்புகள் வாவியில் நீந்திச் சென்றன. இவ்வாறு பாம்புகள் தென்பட்டு சுமார் 5 மாதங்களில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் இப்பாம்புகள் வெளியானதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
Tuesday, November 30, 2010
கல்குடா பிரதேசத்தில் தொடர் மழை
நேற்று இரவு தொடக்கம் தொடர்ச்சியான மழை கல்குடாப் பிரதேசத்தில் பெய்து வருகின்றது.இதன் காரணமாக தாழ்ந்த பிரதேசங்களான மாவடிச்சேனை பிறைந்துரைச்சேனை போன்ற முஸ்லிம் கிராமங்களும் 18ம் கட்டை போன்ற தமிழப்பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் வீதிகளில் காணப்படும் வடிகால்கள் மூடி இல்லாத நிலையில் குப்பைகளால் நிறைந்து காணப்படுகிறது. அதனால் நீர் ஓட முடியாது தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
Saturday, November 27, 2010
ஓட்டமாவடி - வாழைச்சேனை இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள்
இன்று நடைபெற்ற இளைஞர் பாராளுமன்றத்தேர்தலில் கோறளை மத்தி பிரதேசத்தில் இருந்து 258 வாக்ககளைப் பெற்று ஹைராத் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எம்.முசம்மில் என்பவர் வெற்றி பெற்றுள்ளார்.
அதே வேளை கோறளை மேற்கு பிரதேசத்தில் இருந்து ஹீரோ லயன்ஸ் இளைஞர் கழகத்தைச் சேர்ந்த எஸ்.இஹ்சான் ( 237 வாக்குகள் ) என்பவர் தன்னுடன் போட்டியிட்ட சக வேட்பார் ஏ.யு.பாஹிர் ( 148 வாக்ககள் ) என்பவரை விட 89 மேலதிக வாக்குகளினால் வெற்றி பெற்றுள்ளார்.
தற்போது ஊர்வலத்தின் பின்னர் ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளி வாயலில் இஹ்சான் அவர்களினால் நன்றி தெரிவித்து கூட்டமொன்று நடை பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் - வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பம்
இன்று நடைபெற்று முடிந்த இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான வாக்கெண்ணும் பணிகள் பிரதேச செயலாளரின் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.
கோறளை பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் வேட்பாளர்களான பாஹிர் மற்றும் இஹ்சான் என்பவர்களுக்கிடையே போட்டி நிலை ஏற்பட்டுள்ளது.
வாழைச்சேனை மத்திக்கான தேர்தலில் முஸம்மில் என்பவருக்கே வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பிரதேச செயலகத்தில் இருந்து அறியமுடிகின்றது.
Friday, November 26, 2010
இளைஞர் பாராளுமன்றத் தேர்தல் - மும்முரமான வாக்களிப்பு
வாழைச்சேனை மத்தி - ஓட்டாவடி பிரதேசங்களில் இருந்து இளைஞர் பாராளுமன்றத்திற்கு உறுப்பினாகளை தெரிவு செய்வதற்கா வாக்களிப்பு இன்று நடை பெறுகிறது.
ஓட்டாவடி பிரதேச செயலகப்பிரிவில் இருந்து ஒருவரும் வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிலிருந்து ஒருவரும் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வாக்களிப்பு பிரதேச செயலகங்களில் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக பிரதேச செயலகத்தில் இருந்து தற்போது எமது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இன்று மாலை அளவில் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
Thursday, November 25, 2010
முன்னால் கிராம சேவகர் மரணம்
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா வீதியில் வசிக்கும் ஓய்வு பெற்ற கிராம சேவகர் கின்னவாப்பா ( ஜி.எஸ் ) நேற்று ( 25 .11 2010 ) அன்று காலமானார்.அன்னார் முன்னால் அமைச்சர் அமீர்அலியின் செயலாளர் எஸ்.தௌபிக் அவாகளின் தந்தையாவார்.கொட்டும் மழைக்கிடையில் இன்று காலை 7.45 மணியளவில் ஓட்டமாவடி ஜும்ஆ பள்ளி வாயலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Sunday, November 21, 2010
வாழைச்சேனை பிரதேசத்தில் அடிக்கடி மின் தடை
அண்மைக் காலமாக வாழைச்சேனை மின்சார சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்திற்குள் அடிக்கடி மின் தடை ஏற்படுகின்றது.
வாழைச்சேனை பிரதேசம் அதிக பரப்பைக் கொண்டுள்ளதால் கல்குடாவில் அல்லது நாசிவன் தீவில் மின் தடைப்பட்டாலும் வாழைச்சேனை பிரதேசம் முற்றிலுமாக மின்சாரம் தடைப்டுகின்றது.
தற்போது மாணவர்களின் பரீட்சைக்காலமாக உள்ளபடியால் மாணவர்களும் மற்றும் மின் பாவனையாளர்களும் இதனால் அடிக்கடி சிரமப்படுகின்றனர்.
இது தொடாபாக மின்சார சபை கவனமெடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்களுக்கு பாராட்டு
2010 தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மாணவர்களை பாராட்டும் வைபவம் ஒன்றை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை நடாத்த வுள்ளது.
இந் நிகழ்வு பிரதேச சபைத் தவிசாளர் கே.பி.ஹமீட் அவர்களின் தலைமையில் நாளை ( 22.11.2010 ) ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் நடை பெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சபை அமைச்சர் சுபைர் அவர்களும் கைத் தொழில் அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந் நிகழ்வில் கற்பித்த ஆசிரியர்கள் பாடசாலை அதிபர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கல்குடாவின் செய்தித் தளத்துக்கு தெரிவித்தார்.
Friday, November 19, 2010
கால் நடைகள் வீதியில் மேயத் தடை
இன்று காலை வாகனங்களில் வந்த வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தைச்சேர்ந்த பொலிசார் வீதியில் திரிந்த கட்டாக்காலி கால் நடைகளை பிடித்துச் சென்றுள்ளனர்.அக் கால் நடை சொந்தக்காரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அத்துடன் கல்குடாத் பிரதேசம் உல்லாச பிரயாண வலயத்திற்குட்பட்டுள்ளதால் வீதிகளில் குப்பைபோடுதல் ஆடு மாடுகளை வீதியில் மேயவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
அத்துடன் கல்குடாத் பிரதேசம் உல்லாச பிரயாண வலயத்திற்குட்பட்டுள்ளதால் வீதிகளில் குப்பைபோடுதல் ஆடு மாடுகளை வீதியில் மேயவிடுதல் போன்ற செயற்பாடுகளுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
சவாஹிர் சாலியின் நிதி ஒதுக்கீட்டில் மக்களுக்கு உதவி
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ். சவாஹிர் சாலி அவர்களின் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் வாழைச்சேனை ஓட்டாவடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களுக்கு வாழ்க்கைச் செலவை விருத்தி செய்யும் நோக்கில் கோழிக் குஞ்சுகள் மீன்பிடி வலைகள் துவிச்சக்கர வண்டிகள் என்பன அண்மையில் வழங்கப்பட்டன.
வெவ்வேறு நிகழ்வுகளாக நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள் பாடசாலை அதிபர்கள் போன்றோர் கலந்து கொண்டனர்.
Wednesday, November 17, 2010
கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் எம்எப் சிடி அமைப்பினரால் உழ்ஹியா
கல்குடா முஸ்லிம் பிரதேசங்களான ஓட்டமாவடி வாழைச்சேனை மீராவோடை போன்ற பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு எம்எப் சிடி அமைப்பினர் அல் இஷ்ரா நிறுவனத்தின் மூலம் குர்பான் இறைச்சியை வழங்கவுள்ளனர்.அதற்காக ஒவ்வொரு பிராந்திய பள்ளி வாயல்களின் மூலம் அட்டை ஒன்றை பிரதேச மக்களுக்கு விநியோகித்துள்ளனர்.
இவ் அட்டையை கொண்டு சென்று தங்களுக்கான இறைச்சியை பெற்றுக் கொள்ளலாம் என அல் இஷ்ரா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
இதற்கான நிதியை வெளிநாட்டிலுள்ள தனவந்தர்கள் வழங்கியுள்ளனர்.
இவ் அட்டையை கொண்டு சென்று தங்களுக்கான இறைச்சியை பெற்றுக் கொள்ளலாம் என அல் இஷ்ரா நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.
இதற்கான நிதியை வெளிநாட்டிலுள்ள தனவந்தர்கள் வழங்கியுள்ளனர்.
காத்தான்குடி பெண் மக்காவில் மரணம்
முஸ்லிம்களின் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு புனித மக்கா நகருக்கான யாத்திரை சென்ற மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று மக்காவில் மரணமடைந்துள்ளார்.
மட்டு. புதிய காத்தான்குடி பிரதேசத்தின் மத்திய வீதியைச் சேர்ந்த மரியம்வீவி (வயது 55) என்ற பெண்ணே மரணமடைந்தவராவார்.
மக்கா நகரிலுள்ள அறபா மைதானத்திலிருந்து முஸ்தலிபா எனும் இடத்திற்கு பயணிக்கையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவரின் ஜனாஸா நேற்று மாலை மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி தமிழ் சீஎன்எ ன்
Tuesday, November 16, 2010
ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்
Thursday, November 11, 2010
ஓட்டமாவடியில் ஹஜ்ஜாஜிகளின் பரிதாபம்
இம்முறை ஹஜ்ஜுக்குச் செல்ல இருந்த 13 பேருக்கு உரிய விசா கிடைக்காமையினால் ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான வாய்ப்பை இழக்கும் நிலையில் உள்ளனர்.
இவர்கள் குர்ணாகலையில் உள்ள பிரபலமான ஹஜ் முகவர் நிறுவனம் மூலமே இம் மாதம் 8 ம் திகதி ஹஜ்ஜுக்குச் செல்ல இருந்தனர்.அதிகமான பணம் அறவிடப்பட்டுள்ள போதும் விசா வசதி செய்யப்படாமையினால் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது நிர்க்கதிக்குள்ளாகி உள்ளனர்.இவர்களது முகவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ஹஜ்ஜுக்குச் செல்வதற்கான இறுதி விமானம் இம் மாதம் 14ம் திகதி செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாடசாலைக்கு அலுமாரி அன்பளிப்பு
ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்திற்கு இம்முறை 2010 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவிகளின் பெற்றோர்களினால் அலுமாரி ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.அதனை இங்கு படத்தில் காணலாம்
Sunday, November 7, 2010
வீதி விபத்தில் பிரதேச சபை உறுப்பினர் பலி
வாகரை பிரதேச சபை உறுப்பினர் ருவேந்திரன் வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.ருவேந்திரன் சென்ற மோட்டார் சைக்கிள் கதிர வெளியில வைத்து கல் எற்றிச் சென்ற லொறியுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.அவருடன் சென்ற இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவத்தினால் ஊர் மக்களால் லொறி தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் நேற்று முன்தினமிரவு நடந்துள்ளது.
பாசிக்குடா கடலில் குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பு, பாசிக்குடா கடலில் குளிக்கச் சென்ற பதுளை - ஹஸலக்க என்ற பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கிய நிலையில் காணாமல் போயுள்ளார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சேத்தர பண்டார மெதிவெக (40 வயது) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குடும்பத்தாருடன் விடுமுறையைக் களிப்பதற்காக இன்றைய தினம் பாசிக்குடாவிற்கு வந்துள்ளார். இவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இக்கடல் பரப்பில் எச்சரிக்கை பலகைகள் இடப்படாமையினால் இவ்வாறான மரணங்கள் தொடர்கின்றன.
மூன்று பிள்ளைகளின் தந்தையான சேத்தர பண்டார மெதிவெக (40 வயது) என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் குடும்பத்தாருடன் விடுமுறையைக் களிப்பதற்காக இன்றைய தினம் பாசிக்குடாவிற்கு வந்துள்ளார். இவரின் சடலத்தை தேடும் பணிகள் தொடர்வதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். இக்கடல் பரப்பில் எச்சரிக்கை பலகைகள் இடப்படாமையினால் இவ்வாறான மரணங்கள் தொடர்கின்றன.
கஞ்சா வியாபாரி கைது
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனைப் பகுதியில் கஞசா விற்பனையில் ஈடுபட்டிருந்த நாரொருவர் பிடி பட்டுள்ளார்.பொலிசாருக்கு கிடைத்த தகவல் மூலமே இந் நபர் பிடிபட்டுள்ளார். பிடிபடும் போது கஞ்சாவும் கஞ்சாத் தூளும் கைப்பற்றப்ட்டுள்ளன.வெளிநாடுகளுக்கு கஞ்சா தூளாகவே துதல் மஸ்கத் உடன் கலந்து அனுப்பப் படுகின்றது.கஞ்சா வியாபாரி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார்.
Thursday, November 4, 2010
நாளை ஓட்டமாவடியில் இஜ்திமா
நாளை வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி ஜும்ஆப்பள்ளி வாயலிள் தப்லீக் ஜமாஅத் அமைப்பினரால் இஜ்திமா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அஸர்த் தொழுகையின் பின் ஆரம்பமாகும் மார்க்கச் சொற்பொழிவு இரவு 9.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஏறாவுர் காத்தான்குடி போன்ற பிரதேசங்களில் இருந்து அதிகமான மக்கள் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாடளாவிய ரீதியில் உள்ள முக்கியமான உலமாப் பெருமக்கள் மார்க்கச் சொற்பொழிவாற்றவுள்ளனர். இது தொடர்பான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
நாடளாவிய ரீதியில் உள்ள முக்கியமான உலமாப் பெருமக்கள் மார்க்கச் சொற்பொழிவாற்றவுள்ளனர். இது தொடர்பான வேலைகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.
எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகிப் பிரார்த்தியுங்கள்! சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா இறைஞ்சல்.
”எனது தாய் நாட்டைச் சேர்ந்த சகோதர உள்ளங்களே, எனது மீட்சிக்காக எல்லாம் வல்ல ஆண்டவனை மனம் உருகி பிரார்த்தியுங்கள்.” இவ்வாறு இறைஞ்சிக் கேட்டுள்ளார் எஜமானரின் குழந்தையை கொன்றார் என்கிற வழக்கில் சவூதி அரேபியாவில் குற்றவாளியாக காணப்பட்டு மரண தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டிருக்கும் ரிஸானா நௌபீக்.
அவர் இவ்வேண்டுகோளில் தெரிவித்து உள்ளவை வருமாறு:-
”ஹச் பெருநாள் தற்போது கொண்டாடப்படுகின்றது. இது நான் காண்கின்ற இறுதியான ஹச் பெருநாளாக கூட இருக்கலாம். ஏனெனில் எனது தலை விதி மிக விரைவில் நிர்ணயிக்கப்பட இருக்கின்றது.
நான் நிரபராதி என்று காணப்பட்டால் எனது நாட்டுக்கு, வீட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவேன். இல்லையென்றால் என்னை சிரச் சேதம் செய்து விடுவார்கள்.
பெற்றோரையும், உடன்பிறப்புக்களையும் காப்பாற்றுகின்றமைக்காக மாத்திரம், சவூதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக வந்து சேர்ந்த மூதூர்க் கிராமத்து வறிய குடும்பத்துப் பெண் ஒருவரின் வாழ்க்கையின் முடிவாக அது இருக்கும்.
வீட்டில் வறுமையும், வெறுமையும் கொடுமை செய்தன. இதனால் அப்பா என்னை பணிப்பெண்ணாக சவூதிக்கு அனுப்பும் தீர்மானத்தை எடுத்தார். அம்மாவுக்கு இத்தீர்மானத்தில் சற்றுக் கூட உடன்பாடு இருக்கவில்லை.
சாப்பிட்டாலும் சரி, பட்டினி கிடந்தாலும் சரி எல்லாரும் ஒன்றாக இருக்கலாம் என்பது அம்மாவின் கருத்தாக இருந்தது. ஆம். நாங்கள் சில வேளைகளில்தான் ஏதோ சாப்பிட முடிந்திருக்கின்றது. அநேகமான நாட்கள் பட்டினிதான். நாம் ஒருபோதும் வயிறு நிறைய, பசி அடங்க சாப்பிட்டமை கிடையாது. நான் நோன்பு இருக்கின்றமையாக எண்ணி பசியை தாங்கிக் கொள்வேன்.
ஆனால் என் உடன்பிறப்புக்கள் பட்டினி கிடக்கின்றமையை என்னால் தாங்கவே முடியவில்லை. எனவே நான் வீட்டின் நிலையை உணர்ந்து வெளிநாட்டுக்கு பணிப் பெண்ணாக செல்ல சம்மதம் தெரிவித்தேன். அப்பாவுக்கு மிகுந்த சந்தோசம். அம்மாவுக்கு விருப்பம் கிடையாது. அவர் அழுதார்.
கவலைப்பட வேண்டாம் என்று கூறி நான் ஆசுவாசப்படுத்தினேன். நாங்கள் எப்போதும் வறுமையில் வாட முடியாதுதானே? மூத்த பிள்ளை என்கிற வகையில் குடும்பத்தை கரை சேர்க்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றதுதானே? எனவே நான் உறுதியான தீர்மானம் எடுத்து விட்டேன்.
நான் திருகோணமலையைத் தவிர எந்தவொரு பெரிய நகரத்தையும் கண்டிருக்கவில்லை. நான் பெரிய பஸ் நிலையத்தையோ, பெரிய ரயில் நிலையத்தையோ முன்பு கண்டிருக்கவில்லை. ஆனால் சீனக் குடா விமானப் படை தளத்தில் இருந்து ஆகாயத்தை நோக்கி விமானங்கள் பறந்து செல்லக் கண்டிருக்கின்றேன்.
ஆனால் நான் ஒரு விமானத்தில் பயணம் செய்வேன் என்று ஒரு காலமும் கற்பனையில்கூட நினைத்தமை கிடையாது. ஒரு நாட்டுக்கு தனியாக செல்கின்றமைக்கு என்னை நன்றாக மனத்தால் தைரியப்படுத்திக் கொண்டேன். பின் சவூதியில் என்ன நடந்தது? என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.
நான் மனத்தால் கூட இழைத்திராத குற்றத்துக்கு கடந்த ஐந்து வருடங்களாக சிறை வைக்கப்பட்டு இருக்கின்றேன். நான் விரைவில் விடுதலை செய்யப்படலாம் அல்லது கொல்லப்படலாம். இது ஒரு விடயமே அல்ல. ஆனால் நான் அக்குழந்தையை படுகொலை செய்து இருக்கவில்லை.
நான் ஒரு நிரபராதி என்று சத்தம் இட்டு உரத்துக் கூற விரும்புகின்றேன். ஒரு அப்பாவிக் குழந்தையை படுகொலை செய்யும் அளவுக்கு நான் கொடூரமான அரக்கி அல்லள்.
நான் அக்குழந்தைக்கு உணவு ஊட்டியது அது முதல் தடவை அல்ல. எப்போது அக்குழந்தை எனது பராமரிப்புக்காக கையளிக்கப்பட்டதோ அப்போதில் இருந்தே அக்குழந்தையை மிகுந்த பொறுப்புணர்வுடன் பார்த்து வந்திருக்கின்றேன்.
ஏனெனில் எனது குடும்பத்தவர்கள் ஒரு நாள் ஆவது மூன்று நேரம் சாப்பிட வேண்டும் என்பதற்காக செய்யும் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும் என்கிற மனப் பக்குவத்தில் இருந்திருக்கின்றேன். இரவோ, பகலோ என்னிடம் எந்த நேரத்திலும், என்ன வேலை சென்னாலும் சளைக்காமல் செய்ய தயாராகவே இருந்திருக்கின்றேன்.
எஜமானி அம்மா குழந்தைக்கு ஏதோ ஆபத்து நேர்ந்து விட்டது என்று கண்டபோது மிகவும் உக்கிர கோபம் அடைந்து அராபிய மொழியில் என்னைத் திட்டத் தொடங்கினார். ஆனால் அவர் என்ன சொல்லி திட்டினார்? என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. எஜமானர் ஐயாவும் வந்து சேர்ந்தார்.
என்னை ஒரு உதைபந்து என்று எஜமானர் ஐயா எண்ணி விட்டார் போலும். மாறி மாறி கன்னங்களில் விளாசினார். நான் அல்லாஹ், அல்லாஹ் என்று கதறினேன். அவர்கள் ஆர் ஆரோவுக்கு எல்லாம் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டார்கள். அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் சிறிது நேரத்தில் வந்து சேர்ந்தனர். அதட்டினார்கள்.
என் மீது மனிதாபிமானம் அற்ற முறையில் தாக்குதல்கள் நடத்தினார்கள். நான் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவள்தான். ஆனால் குற்றவாளி அல்லள். என் பெற்றோர் ஒரு முறை கூட என் மீது கை வைத்தமை கிடையாது.
அவர்கள் குழந்தையை அவசர அவசரமாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதற்கு இடையில் பொலிஸார் வந்து சேர்ந்தனர். என்னை சுட்டிக்காட்டி எஜமானரின் ஆட்கள் ஏதோ பொலிஸுக்கு சொன்னார்கள். நான் நடுங்கத் தொடங்கி விட்டேன். எனக்கு சின்ன வயதில் இருந்தே பொலிஸ் என்றாலே இனம் தெரியாத பீதி. பொலிஸார் எனக்கு கை விலங்கு பூட்டினார்கள். நான் அழுதேன்.
அவர்களுடன் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டனர். நான் முதலில் மறுத்தேன். அவர்கள் அராபிய மொழியில் மிரட்டினார்கள். எனவே அவர்களுக்கு கீழ்ப் படிந்து நடந்தேன். என் மனதில் குடும்பத்தாரின் நினைவு கீழ் சூழ்ந்து கொண்டன.
அம்மாவை நினைத்துக் கொண்டேன். அம்மா... நான் எந்தப் பிழையும் செய்திருக்கவில்லை என்று சொல்லி உள்ளூர அழுதேன். அப்பாவியான என்னை அல்லாஹ் நிச்சயம் காப்பாற்றுவார் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன். பொலிஸ் நிலையத்தில் என்னிடம் அராபிய மொழியிலான ஆவணம் ஒன்றை தந்து ஒப்பம் இட வற்புறுத்தினர். நான் தமிழில் ஒப்பம் இட்டுக் கொடுத்தேன்.
நான் சில பெண்களுடன் இரும்புக் கூண்டுக்குள் அடைக்கப்பட்டேன். அப்பெண்கள் என்னை சூழ்ந்து கொண்டனர். ஆசுவாசப்படுத்தினர். அழ வேண்டாம் என்றனர். எனது கண்ணீரை சீலைத் துண்டால் துடைத்தனர். ஏதேதோ மொழியில் எல்லாம் அப்பெண்களில் சிலர் என்னிடம் கேட்டனர். நான் தமிழில் விளங்கப்படுத்தினேன்.
அவர்கள் நான் சொன்னவற்றை விளங்கிக் கொண்டார்களா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களில் சிலருக்கு அரபு தெரிந்து இருந்தது. பொலிஸ்காரர் ஒருவரிடம் என்னை காட்டி வினவினர். பொலிஸ்காரனும் ஏதோ கூறினார். அப்பெண்களில் சிலர் சிங்களவர்கள். அவர்களின் அரவணைப்பில் நான் இருந்தேன்.
என் தாயின் அன்பை என்னிடம் காட்டினார்கள். இரு நாட்கள் கழிந்தன. பொலிஸார் என்னை கூண்டில் இருந்து வெளியில் கொண்டு சென்றனர். கறுத்த, பருத்த இந்திய மனிதர் வந்து என்னிடம் தமிழில் சில கேள்விகள் கேட்டார். அவரது தமிழ் மிகவும் வித்தியாசமானதாக இருந்தது. தமிழ் திரைப்ப்டங்களில் கையாளப்படுகின்ற தமிழை விடவும் வேறுபட்டதாக இருந்தது.
ஆயினும் அவரது தமிழை கொஞ்சம் விளங்கிக் கொண்டேன். எனது கதையை உருக்கமாக அவருக்கு கூறினேன். நான் சவூதி அரேபியாவை சென்றடைந்து இரு வாரங்களுக்கு பின் முதன் முதல் அங்கு தமிழில் இன்னொருவருடன் உரையாடிய சந்தர்ப்பம் அதுவே. ஆனால் அந்த இந்தியர் நான் சொன்னவற்றை சரியாக விளங்கிக் கொள்ளவே இல்லை.
அம்மனிதர் மொழிபெயர்த்தவற்றை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் குறிப்புப் புத்தகம் ஒன்றில் பதிந்து கொண்டார். குறிப்புப் புத்தகத்தில் அவ்வுத்தியோகத்தர் எழுதியவற்றுக்கு கீழ் என்னை கையொப்பம் இடக் கோரினர். நான் கையொப்பம் இட்டுக் கொடுத்தேன்.
எனது வாக்குமூலங்களை பதிவு செய்த பின் என்னை விடுதலை செய்வார்கள் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது. ஆனால் எனது பேரவலம் அங்குதான் ஆரம்பம் ஆனது என்பதை பின்னர்தான் உணர்ந்து கொண்டேன். எனது வாழ்க்கை மீட்சி இல்லாத அந்தகாரத்தை நோக்கி செல்லத் தொடங்கி இருக்கின்றது என்பதை சில நாட்களில் உணர்ந்து கொண்டேன்.
அழுகின்றமையையும், அல்லாஹ்விடம் முறையிட்டு இறைஞ்சுகின்றமையையும் தவிர எனக்கு வேறு மார்க்கம் இருக்கவே இல்லை. நித்திரை செல்கின்றமைக்கு முன்னர் இரவு தோறும் எனது விடுதலைக்காக அல்லாஹ்விடம் தவறாமல் மன்றாடுவேன். காலையில் வேளைக்கு எழுந்து அல்லாஹ்வை பிரார்த்திப்பேன்.
எனது பிரார்த்தனையை அல்லாஹ் செவிமடுத்து நல்ல செய்தி தருவார் என்பது எனது நம்பிக்கையாக இருந்தது-இருக்கின்றது. சிறைச்சாலையில் குர்ஆன் படிக்கின்றமைக்கு தேவையான வசதிகள் உள்ளன. ஆனால் தற்போதைய சிறை வாழ்க்கை எனக்கு நம்பிக்கை ஊட்டும் விதத்தில் இல்லை.
எஜமானி அம்மாவின் வீட்டில் இரு வாரங்கள் மாத்திரம் வேலை செய்திருக்கின்றேன். ஆனால் மிகுதி நாட்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டிருக்கின்றேன். எனது பெற்றோர் என்னை நேரில் வந்து பார்வையிட்டனர். அவர்களின் வரவு எனக்கு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. ஆயினும் அவர்களுடன் அதிகம் கதைக்க முடியவில்லை. அழத்தான் முடிந்தது.
எனக்காக சில மனிதாபிமானிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்களுக்கு எனது ஆயுள் காலம் முழுவதும் நன்றி உடையவளாக இருப்பேன். நான் சிரச் சேதம் செய்யப்பட்டாலும் கூட எனது இறுதி மூச்சு இருக்கும் வரை அவர்களின் உதவியை மறக்கவே மாட்டேன். அவர்களின் குடும்பங்களை அல்லாஹ் ஆசிர்வதிக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.
ஏனெனில் இந்த அவலைப் பெண்ணைக் காப்பாற்றுகின்றமைக்காகப் பெரும்தொகைப் பணத்தை செலவு செய்திருக்கின்றனர். எனது தாய் நாட்டைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள் அனைவரும் எனது விடுதலைக்காக எல்லாம் வல்ல இறைவனிடம் மனம் உருகிப் பிரார்த்திக்க வேண்டும். குறிப்பாக முஸ்லிம் சகோதர, சகோதரிகள் எனக்காக அல்லாஹ்விடம் மன்றாட வேண்டும்.
ஹச் பெரு நாள் நிறைவடையும் வரை எவருக்கும் சவூதியில் சிரச் சேதம் நடவாது என்பதை அறிந்து வைத்திருக்கின்றேன். இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இலங்கை அரசுத் தரப்பினர், ஏனைய பிரமுகர்கள் என்று எனது விடுதலைக்காகப் பாடுபடுகின்ற அனைவருக்கும் மிகுந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நாங்கள் உங்கள் அனைவரையும் இலங்கையில் சந்திக்க ஆசைப்படுகின்றேன். இல்லா விட்டால் நாங்கள் நிச்சயம் சொர்க்கத்தில் சந்திப்போம். நான் நிராபராதி. தூய்மையானவள். குற்றம் இழைக்காதவள். எனவே எனக்கு சொர்க்கத்தில் நிச்சயம் இடம் உண்டு.”
சவூதியில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு நன்றி
நன்றி தமிழ் சீ.என்.என்
அவருடைய விடுதலைக்கான மனுவில் ஒப்பமிட
http://www.petitiononline.com/Rizana/petition.html
http://www.change.org/petitions/view/stop_the_execution_of_rizana_nafeek_in_saudi_arabia
http://www.petitiononline.com/Rizana/petition.html
http://www.change.org/petitions/view/stop_the_execution_of_rizana_nafeek_in_saudi_arabia
Tuesday, November 2, 2010
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை விழா - புகைப்படங்கள்
பிரதி அமைச்சர் அவர்கள் தேசியக் கொடி ஏற்றுவதையும் மாணவ மாணவிகளுக்கு பரிசில்கள் மற்றும் சான்றிதழ் வழங்குவதையும் மாணவர்களது கலைகலாசார நிகழ்வுகளை கண்டு கழிப்பதையும் அரங்கு நிறைந்த பெற்றோர்கள் பார்வையாளர்கள் கல்வி அதிகாரிகள் பாடசாலைகளின் அதிபர்கள் ஆசியர்களையும் காணலாம்.
Monday, November 1, 2010
முப்பெரும் விழா-2010 - வாழைச்சேனை அந்நுர் தேசிய பாடசாலை விழாக்கோலம்
மட்/வாழைச்சேனை அந்-நூர் தேசிய பாடசாலையில் எதிர்வரும் 02.11.2010ம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணிக்கு முப்பெரும் விழா (பரிசளிப்பு, பஸ் கையளிப்பு , அடிக்கல் நாட்டு விழா) நடைபெறவுள்ளது.அதிபர் யு.அஹமட் அவர்களின் தலைமையில் நடக்கும் இவ் வைபவத்திற்கு சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
பிரதி அமைச்சர் தேர்தலுக்குப்பின் வாழைச்சேனை பிரதேசத்திறகு ஓர் நிகழ் வொன்றிற்கு வருகை தருவது இதுவே முதற் தடவை.அதன் காரணமாக அமைச்சர் அவர்களின் ஆதரவாளர்கள் பிரதேச மக்கள் என பலரும் அமைச்சரின்வருகைக்காக காத்திருக்கின்றனர்.
Thursday, October 14, 2010
உண்மைச் செய்திகளுடன்
Subscribe to:
Posts (Atom)